சென்னை

சென்னையில் கொரோனா நோயாளிகளிடம் இருந்து பரவலைத் தடுக்க மாநகராட்சி புதிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   நேற்று வரை சென்னையில் 3.97 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 5300 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்றுவரை 3.57 லட்சம் பேர் குணம் அடைந்து சுமார் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த பரவல் மேலும் அதிகரிக்காமல் இருக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அவ்வகையில் சென்னை மாநகராட்சி பல புதிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.  அவை பின் வருமாறு :

  1. கொரோனா பரிசோதனை முடிவுகள் இனி நோயாளிகளுக்கு வழங்கப்பட மாட்டாது. மாறாகச் சென்னை மாநகராட்சியிடம் அளிக்கப்படும்
  2. பாதிக்கப்பட்டோரை அவரவர் வீட்டுக்குச் சென்று சந்திக்கும் மாநகராட்சி ஊழியர்கள் அவர்களுக்குச் சிகிச்சை பொருட்களை அளித்து சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்
  3. மண்டல வாரியாக தொலைபேசி மூலம் ஆலோசனைகள் வழங்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  4. 60 வயதுக்கு மேற்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்போரைக் கவனிக்க மேலும் மருத்துவர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
  5. ஒவ்வொரு மண்டலத்திலும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொண்ட 20 படுக்கைகள் கொண்ட ஆக்சிஜன் பார்லர்கள் அமைக்கப்பட உள்ளன.