பெங்களூரு

ருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை ஒதுக்கீட்டில் ஊழல் புரிந்ததாக பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா குறிப்பிட்டவர் யாரும் இதுவரை கைதாகவில்லை.

பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் படுக்கைகள் ஒதுக்கீடு சேயும் பொறுப்பு மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மண்டலத்திலும் இதற்காக வார் ரூம் திறக்கப்பட்டுள்ளது.  அங்குள்ள அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்புக்கள் மூலம் படுக்கைகள் தேவை குறித்து மக்கள் தெரிவிப்பார்கள்.

மருத்துவமனைகளில் படுக்கைகள் காலி நிலவரத்தைப் பொறுத்து அதிகாரிகள் ஒதுக்கீடு செய்வது வழக்கமாகும்.  சமீபகாலமாக பெங்களூருவில் அனைத்து வம்ருத்துவமனைகளிலும் படுக்கை இல்லை எனப் பதில் வரத் தொடங்கியது.  எனவே எடியூரப்பா அரசு நிர்வாகம் தோல்வி அடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

பாஜகவின் பெங்களூரு தெற்கு தொகுதி மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா மற்றும் அவர் ஆதரவாளர்கள் ஜெயநக்ர் பதியில் உள்ள வார் ரூம் அறைக்குச் சென்று விசாரித்து அங்குள்ள 17 முஸ்லிம், ஊழியர்கள் படுக்கைகளை புக் செய்து பணம் வாங்கி அவற்றை விற்பனை செய்தாக தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டினார்.  முதலில் இது தொடர்பாகத் தேஜஸ்விக்குப்  பாராட்டு மழை குவிந்த போதும் பிறகு அவர் முஸ்லிம்களை குறி வைப்பதாகக் கூறப்பட்டது.

அதற்கேற்றாற்போல் முதலில் 5 பேரைக் கைது செய்த காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் ஒருவரைக் கூட இதுவரை கைது செய்யவில்லை.   இதுவரை இந்த இஸ்லாமியர்கள் இவ்வாறு ஊழல் செய்ததற்கான எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.  இது தொடர்பாக இன்றும் வார் ரூமில் காவல்துறையினர் சோதனை இட்டுள்ளனர்.  இந்த அறைகளின் சிசிடிவி பதிவுகளும் சோதனையிடப்பட்டு வருகின்றன.