சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்றுமுதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கோவையில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மையத்திற்கு வந்து வரிசையில் காத்துகொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவலை தடுக்க 15 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொய்வின்றி தொடரும், என்றும், பொதுமக்கள் தடுப்பூசிகளை அதற்கான மையங்களுக்கு சென்று செலுத்திக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதுமுடக்கம் காரணமாக ஏராளமானோர் வீடுகளில் முடங்கி உள்ளதால், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம். அரசு கலைக் கல்லூரியில் முதற்கட்டமாக ஆயிரம் டோக்கன் வினியோகம் செய்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுச் செல்கிறார்கள்.