டெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்த விசாரணையைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜனின் ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை கண்காணிக்க தேசிய அளவிலான பணிக்குழுவை அமைத்து உத்தரவிட்டு உள்ளது.
மத்திய அரசு, பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்குவதை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தேவை மற்றும் விநியோகிப்பதை மதிப்பிட்டு கண்காணிக்கவும், கோவிட் -19 (COVID) சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கிடைக்கச் செய்வதையும் உறுதி செய்யும் என்றும் தெரிவித்து உள்ளது.
இந்த குழுவிற்கு தலைவராக மத்திய அமைச்சரவை செயலாளர் இருப்பார் என்றும், மேலும், மேற்கு வங்காள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பபாடோஷ் பிஸ்வாஸ், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு துணையாக டெல்லி மருத்துவமனை மருத்துவர்கள், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவர், பெங்களூரின் நாராயணா ஹெல்த்கேர் மற்றும் மும்பையின் ஃபோர்டிஸ் மருத்துவமனை ஆகியவற்றின் முக்கிய மருத்துவர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.