சென்னை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என உத்தரவிட்டு, அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
அதைத்தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ஆவடி நாசர், அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

அவரது டிவிட்டில், மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் கையெழுத்திட்ட முதல் முத்தான ஐந்து திட்டங்களில் ஒன்றான பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தல் ஆணையை ஏற்று, முதல் நாள் முதல் கையெழுத்தாக பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து கோப்பில் கையெழுத்திட்டேன் என தெரிவித்துள்ளார்.

Patrikai.com official YouTube Channel