சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்றுஅஞ்சலி செலுத்திவிட்டு தலைமைச் செயலகம் வருகிறார். அவருக்காக அங்கு, முதல்வர் அறை தயாராக வைக்கப்பட்டு உள்ளது.
மு.க.ஸ்லின் தலைமையிலான 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை இன்று காலை பதவி ஏற்றது. ஆளுநர் மாளிகையில் தர்பார் அரங்கம் அருகே உள்ள புல்வெளியில் முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற்றது.
பதவி ஏற்பு விழா முடிந்ததும், சென்னை கோபாலம் கருணாநிதி இல்லத்துக்கு சென்று, அவரது புகைப்படத்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன் தாயார் தயாளுஅம்மாவிடம் ஆசி பெற்றார்.
அதைத்தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செய்வதுடன், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கும் சென்று மரியாதை செய்கிறார். பின்னர் சிஐடி காலனியில் உள்ள கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளை சந்தித்து ஆசி பெறுகிறார். தொடர்ந்து, பேராசிரியர் மறைந்த அன்பழகன் வீட்டுக்கு சென்று, அவரது உருவ படத்துக்கு மரியா செய்கிறார்.
பின்னர் மதியம் 12 மணிக்கு மேல் தலைமைச்செயலகம் வருகை தருகிறார். அவரது வருகைக்காக அங்குள்ள முதல்வர் அறை, வர்ணம் தீட்டப்பட்டு புதுசாக மாற்றப்பட்டு உள்ளது. அத்துடன் அண்ணா, கருணாநிதி படங்களும் இடம்பெற்றுள்ளன.
பிற்பகல் தலைமைச்செயலகத்தில், அமைச்சசர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வவர், தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார்.