தமிழக சட்டமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9.10 மணி அளவில்  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து, மற்ற 33 அமைச்சர்களும்பதவி ஏற்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் உள்ள துறைகள் விவரம்:

பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன் ஆகிய துறைகள்  மு.க.ஸ்டாலின் வசம் உள்ளது.

[youtube-feed feed=1]