நாகர்கோவில்: முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரமே தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது. இதனால், பல வேட்பாளர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டபொன்.ராதாகிருஷ்ணன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel