பெங்களூர்
இன்று கேரளா மாநிலத்தில் 41,953 கர்நாடகாவில் 50,112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 41,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 17,43,933 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 58 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 5,566 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 23,106 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 13,62,363 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,75,657 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
கர்நாடகாவில் இன்று 50,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 17,41,046 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 3446 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 16,884 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 26,841 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 12,36,854 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,87,288 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.