சென்னை
தமிழக முதல்வராகப் பதவி ஏற்க உள்ள மு க ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் எல் முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியுற்று தமிழக ஆட்சிப் பொறுப்பை இழந்துள்ளது. திமுக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். இதற்காகப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில் தமிழக பாஜக ஒரு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில்.
“முதலமைச்சராக பதவி ஏற்கும் திமுக தலைவருக்கு வாழ்த்துக்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான ஆதரவை பெற்ற் திமுக கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது.
திமுகவின் தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு தமிழக பாஜகவின் சார்பில் எனது மகிழ்வான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தமிழக மக்களின் உயர்வுக்கு தாங்கள் எடுக்கும் சிறப்பான நடவடிக்கைகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
என்றும் தாயகப்பணியில்
எல் முருகன்”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.