கடந்த 1996-2001 காலக்கட்டத்திற்கு பிறகு, தமிழக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் ஆகிய அனைத்திலும், தமிழ்நாட்டின் பிற கட்சிகளைவிட அதிக உறுப்பினர்களைப் பெற்று திமுக வலிமையுடன் திகழ்கிறது.
இதில், நாடாளுமன்ற மேலவையில் மட்டும், அதிமுகவுடன் சமபலத்தில் உள்ளது திமுக. அங்கு 2 கட்சிகளுக்கும் தலா 7 உறுப்பினர்கள் உள்ளனர்.
மக்களவையைப் பொறுத்தவரை, திமுகவிற்கு மொத்தம் 24 உறுப்பினர்கள் உள்ளனர்.
தற்போதைய சட்டமன்ற தேர்தல் முடிவின்படி, திமுகவிற்கு, தமிழ்நாடு சட்டமன்றத்தில், 133 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். அடுத்த ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றதால், திமுகவால் தனித்து, மொத்தமாக 4 வேட்பாளர்களை நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 133 உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மொத்தமாக 31 உறுப்பினர்கள் என்று, நீண்டகாலத்திற்குப் பிறகு, அரசியல் அரங்கில் ஒரு வலுவான நிலைக்கு வந்துள்ளது திமுக.