நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. கொரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்தவுடன், சென்னையில் 2-ம் கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் எனவும் கூறப்படுகிறது. தில் ராஜு, விஜய் – வம்சி பைடிபல்லி இணையும் படத்தைத் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.