சென்னை

மிழகத்தில் கொரோனா தடுப்பு குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பது அரசுக்கு கடும் பிரச்சினையாக உள்ளது.   தற்போது தேர்தல் முடிந்து தமிழகத்தில் திமுக சார்பில் மு க ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவை அடைந்துள்ளது.  இதை தடுப்பது குறித்து இன்று மு க ஸ்டாலின் அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இது குறித்து மு க ஸ்டாலின், ““தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் இச்சூழலில் இத்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் பிற சுகாதாரத்துறை அலுவலர்களோடு இன்று எனது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தின் போது, கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எந்தவிதமான தொய்வுமின்றி முழு முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினேன்.

தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்குச் சென்னையில் Remdesvir போன்ற மருந்துகள் அரசால் வழங்கப்படுவது போன்று, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவச் சிகிச்சைகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினேன்.” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.