சென்னை
தமிழகத்தில் இன்றைய (03/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 20,935 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,28,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14,468 பேர் உயிர் இழந்து 10,90,338 பேர் குணம் அடைந்து தற்போது 1,23,258 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 6,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 3,52,260 பேர் பாதிக்கப்பட்டு 4,858 பேர் உயிர் இழந்து 3,14,617 பேர் குணம் அடைந்து தற்போது 32,785 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 84,638பேர் பாதிக்கப்பட்டு 976 பேர் உயிர் இழந்து 74,405 பேர் குணம் அடைந்து தற்போது 9,257 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 82,689 பேர் பாதிக்கப்பட்டு 729 பேர் உயிர் இழந்து 73,772 பேர் குணம் அடைந்து தற்போது 8,188 பேர் சிகிச்சையில் உள்ளனர்.