சென்னை: தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் புதிய ஆட்சி அமைய உள்ளதால், அதிமுக ஆட்சியின் அமைச்சர்களின் அறைகள் முன்பு பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டு உள்ளன.   திமுக ஆட்சியில்  அமைச்சர்களுக்கான இடங்கள் மற்றும் துறைகள் ஒதுக்கப்பட்ட பிறகு, அவர்களின் பெயர் பலகை பொருத்தும் வகையில்,  பழைய பெயர் பலகைகள் அகற்றப்பட்டு  உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி பிடித்துள்ளது., திமுக நேரடியாக 125 இடங்கள் முன்னிலையில் உள்ள நிலையில் தனி பெரும்பான்மையுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆட்சி அமைத்து, முதல்வராகவரும் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கிறார். அன்றைய தினம் திமுக அமைச்சரவையும் பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் இடம்பெறப்போகும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யார் என்பது குறித்து திமுக தலைமை ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள முதல்வர், துணைமுதல்வர் ம்ற்றும் அமைச்சர்களின் அறை வாயில்களில் பொருத்தப்பட்டிருந்த  பெயர் பலகைகளை அதிகாரிகள் அகற்றி உள்ளனர். அவற்றை குடோனில் குவித்து வைத்துள்ளனர்.

திமுக ஆட்சியில் பதவி ஏற்கும், புதிய அமைச்சர்கள் வரும்போது, அவர்களின் பெயர்களில் பெயர் பலகைகள் வைக்கும் வகையில் முன்னாள் அமைச்சர்களின் பெயர் பலகைகள்  அகற்றப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.