சென்னை: தமிழகஅரசின் ஆலோசகராக இருந்து வந்த தமிழக அரசின் முன்னாள் தலைமைச்செயலர் சண்முகம் ராஜினாமா செய்துள்ளார்.
திமுக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அதிமுக அரசால் நியமிக்கப்பட்ட பல உயர்அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் தலைமைச்செயலாளர் சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக அரசின் 46வது தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த சண்முகத்தின் பதவிக்காலம் ஜனவரி 31, 2021 அன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அவரை தமிழக அரசின் ஆலோசகராக நியமித்தது. தற்போது, திமுக தலைமையிலான ஆட்சி பதவி ஏற்க உள்ளதால், சண்முகம், ஆலோசகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.