சென்னை: அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என அதிமக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பளார்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நிர்வாகம் எனும் நாணயத்தின் ஒரு பக்கம் ஆளும் கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாகவும் செயல்பட வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.
தமிழக பேரவையிலும், ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்க்கட்சி எனும் பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவை அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றுவோம். அதிமுக மற்றும் கூட்டணிக கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக அரும்பணியாற்றிய கட்சியினருக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றுவதற்கும், கட்சியைக் காக்கும் கடமையில் தோளோடு தோள் நின்று உழைப்பதற்கும் அனைவரும் உறுதி ஏற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் எனறு தெரிவித்துள்ளனர்.< ஆட்சித்தேர் சரியாக செழுத்த அச்சாணியாக செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது” “தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அதிமுக பணியாற்றும் என்றும் ”
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.