சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், தறபோதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கவர்னர் பன்வாரிலாலுக்கு கடிதம் அனுப்பினார்.
இதனிடையே, தமிழகத்தில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது. இதில் திமுக நேரடியாக 125 இடங்கள் முன்னிலையில் உள்ள நிலையில், தனி பெரும்பான்மையுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கப்போகிறார். இதையொட்டி நாளை கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்கக உரிமை கோர முடிவு செய்துள்ளார்.
முன்னதாக நாளை காலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற கட்சித்தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இந்த நிலையில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்து, கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.அவருடன் மற்ற அமைச்சர்களும் ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளதாககூறப்படுகிறது.
இந்த தேர்தலில் அதிமுக மட்டும் 65 இடங்களை கைப்பற்றி உள்ளதுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்பட 11 பேர் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.