போபால்

த்தியப் பிரதேசத்தில் இருந்து கும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களில் 99% பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவலில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முக்கிய காரணம் கும்பமேளா மற்றும் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் எனக் கூறப்படுகிறது.   ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் ஏராளமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும் அதை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதால் அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த விழாவுக்கு நாடெங்கும் இருந்து பல லட்சக்கணக்கானோர் சென்றிருந்ததால் பரவல் மேலும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்தது.   அதை நிரூபிப்பது போல் தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் தொற்று பரவி வருகிறது.  கும்பமேளாவில் கலந்துக் கொண்டு திரும்பி வருவோரில் சிலர் மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 99% பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இவர்கள் தற்போது தனிமையில் வைக்கபட்டுள்ளனர். அதே வேளையில் கும்பமேளா சென்றுவிட்டு திரும்பியவர்கள் யார் யார் என எளிதாக கண்டறிய முடிவதில்லை என்பதால் இன்னும் எத்தனைபேர் கொரோனா பாதிப்புடன் மாநிலத்தி8ல் உள்ளனர் என்பதும் அவர்களிடம் இருந்து எத்தனை பேருக்கு கொரோனா பரவும் என்பதும் அறியாததால் கடும் அச்சம் நிலவுகிறது.

டில்லி நகரில் இருந்தும் ஏராளமானோர் கும்பமேளா சென்று திரும்பி வந்துள்ளனர்.  அங்கு சென்று திரும்பி வருவோர் அனைவரும் 14 நாட்கள் தனிமையில் இஒருக்க வேண்டும் என்பது டிலியில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.   இதே அச்சம் குஜராத்தில் நிலவுவதால் அங்கும் கும்பமேளா சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.