மாரி, தெறி, கத்தி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்த மூத்த குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.ஜி. செல்லதுரை வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை மாலை சென்னை பெரியார் நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.

1963-இல் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நடித்த பணக்கார குடும்பம் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார் நடிகர் செல்லதுரை.

அந்நியன், சிவாஜி, ராஜா ராணி, நட்பே துணை, அறம், மாரி, தெறி, கத்தி ஆகிய படங்களில் தன் தனிப்பட்ட நடிப்பால் புகழை அடைந்தவர் நடிகர் செல்லதுரை.

அவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அவர்களின் தேவாலயத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.