டெல்லி: கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளில் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும்போது, இந்தியாவில் மட்டும் ரூ.400 என விற்பனை செய்யப்படுவது ஏன், உங்களுக்கு சென்ஸ் இல்லையா என தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான சீரம், பயோடெக் நிறுவனங்களை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமான நிலையில், தடுப்பு மருந்துகளும், ஆக்சிஜனும் பற்றாக்குறை எழுந்துள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்குப்பதிவு செய்து, . நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
ஏற்கனவே கடந்த விசாரணையின்போதது, இந்த விஷயத்தில் நாங்கள் மவுனமாக இருந்து வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. ஆக்சிஜன் என்பது நாடு சார்ந்த தேசிய அளவிலான பிரச்சினை. எனவே அதை விசாரிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு என கடுமையாக சாடியது.
இந்த நிலையில் வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, அமர்வில் உள்ள நீதிபதியான ஜேஜெ ரவீந்திரநாத் பட், கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களான சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனங்களை கடுமையாக சாடினார்.
“ஒரு தடுப்பூசி அமெரிக்காவில் 2.15 டாலருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் 3 டாலருக்கும் கிடைக்கும்போது, அது ஏன் இந்தியாவில் ரூ .400 க்கு விற்கப்படுகிறது என கேள்வி எழுப்பியவர், இது சரியானது அல்ல என காட்டமாக விமர்சித்தார்.