சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க அனைத்து பகுதிகளிலும் மைக்மூலம் அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் புதன்கிழமை மீண்டும் விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.
தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னை உயர்நீதி மன்றம் சூமோட்டோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இன்றைய விசாரணையின்போது, கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நீதிமன்றம், தடுப்பூசி குறித்து மக்களிடம் எழுந்துள்ள தயக்கத்த போக்கவும், தடுப்பூசிகளை எடுக்கவும் வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒவ்வொரு மூலை மற்றும் முடுக்கிலும் மைக் மூலம் விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், உயர்நீதிமன்றத்திற்கு மே 1ந்தேதி முதல் விடுமுறை என்றாலும், இந்த வழக்கு விசாரணை வரும் புதன்கிழமை (மே 5ந்தேதி) மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.