அகமதாபாத்: டெல்லிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில், 154 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. இதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷப்மன் கில், 38 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார். கேப்டன் மோர்கன் டக்அவுட் ஆனார்.

சுனில் நரைனும் டக்அவுட், ஆண்ட்ரே ரஸ்ஸல் 27 பந்துகளில் 45 ரன்களை அடித்து இறுதிவரை நாட்அவுட்டாக நின்றார். அதில், 4 சிக்ஸர்கள் அடக்கம். முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா, 20 ஓவர்களில் 154 ரன்களை சேர்த்தது.

டெல்லி அணியின் லலித் யாதவ், 3 ஓவர்கள் வீசி, 13 ரன்கள் மட்டுமே கொடுத்து, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.