சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைவதால், இரவு 7.30 மணி முதல்  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exitl Poll) வெளியாகி பரபரப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம், கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக, தேர்தல் நடத்தை  விதிமுறைகள் பிப்ரவரி 26ந்தேதி மாலை முதல் அமலுக்கு வந்தன. அத்துடன் வாக்குப்பதிவு தொடங்கிய ஏப்ரல் 6ந்தேதி முதல்  முதல் ஏப்ரல் 29 இரவு 7.30 மணி வரை வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

இதுவரை தமிழகம், கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களுக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், மேற்கு வங்கத்தில் இன்று  இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.இந்த வாக்குப்பதிவானது மமாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, இரவு 7.30 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் தடையும் விலகுகிறது.

இதைத்தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட பல ஊடகங்கள் தயாராக உள்ளன. தேர்தல் வெற்றி தோல்வி குறித்து ஏற்கனவே  பொதுமக்களிடம்  கருத்துக்கள் பெற்றுள்ள நிலையில், இன்று இரவு 7.30 மணி முதல் தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியாகி மக்களை அதகளப்படுத்தும். ஒவ்வொரு ஊடகமும் வெவ்வேறு வகையான தகவல்களை வெளியிட்டு மக்களை மேலும் குழப்பும் என்பதையும் மறுக்க முடியாது.