டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.
சீரம் நிறுவனம் விலை குறைப்புக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த விலை குறைப்பு மூலம் இனி கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.300க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மாநிலங்களுக்கு வழங்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசி ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. கோவிஷீல்ட் தடுப்பூசி விலை உயர்வுக்கு பல்வேறு மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.