சென்னை: வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசிக்கவில்லை என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, வாக்கு எண்ணிக்கையின் போது, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை, கடுமையாக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையின்போது, எந்தவித கொண்டாட்டமும் நடத்தக்கூடாது என தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்கும் திட்டம் இல்லை என்று என்றும், அதுதொடர்பாக எந்தவொரு ஆலோசனையும் இல்லை என கூறியுள்ளார்.
வாக்கு எண்ணும் மையத்தில் செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தருவோம் என்றும் ஞாயிறு ஊரடங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலாளருடன் ஆலோசிக்கப்படும் என குறிப்பிட்டவர், திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என கூறியுள்ளார்.