டில்லி

ந்தியாவில் நேற்று 3,19,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,19,315 பேர் அதிகரித்து மொத்தம் 1,76,25,735 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,762 அதிகரித்து மொத்தம் 1,97,880 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 2,48,639 பேர் குணமாகி  இதுவரை 1,45,45,342 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 28,75,041 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 48,700 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 43,43,727 ஆகி உள்ளது  நேற்று 524 பேர் உயிர் இழந்து மொத்தம் 65,284 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 71,736 பேர் குணமடைந்து மொத்தம் 36,01,796 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,74,770 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 21,890 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,27,546 ஆகி உள்ளது.  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,139 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,943 பேர் குணமடைந்து மொத்தம் 11,89,267 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,32,808 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 29,744 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,68,945 ஆகி உள்ளது  இதில் நேற்று 201 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,627 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 10,663 பேர் குணமடைந்து மொத்தம் 10,73,257 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,81,042 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 33,551 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,20,176 ஆகி உள்ளது.  நேற்று 249 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,414 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 26,719 பேர் குணமடைந்து மொத்தம் 8,04,563 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,04,199 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 15,684 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,97,672 ஆகி உள்ளது  இதில் நேற்று 94 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,651 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,625 பேர் குணமடைந்து மொத்தம் 9,76,876 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,07,145 பேர் சிகிச்சையில் உள்ளனர்.