பெங்களூரு: ஐபிஎல் தொடரில் இருந்து அஸ்வின் ரவிச்சந்திரன் விலகுவதாக அறிவித்த நிலையில்,  ஆர்.சி.பி வீரர்கள் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்ட்சன் விகுவதாக திடீரென அறிவித்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னணி வீரர்கள் அடுத்தடுத்த விலகி வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும்  ஐபிஎல்2021ல், தமிழக வீரரான சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 5 போட்டிகளை டெல்லி அணி சந்தித்துள்ளது.  ஆனால்,  இதுவரை அஸ்வினால் ஒரு விக்கெட்டைக்கூட கைப்பற்றப்பட முடியவில்லை. இது விமர்சனங்க்ளை எழுப்பி வந்தது.

இந்தநிலையில், கொரோனா தாக்கம் காரணமாக அவர் தன்னுடைய குடும்பத்தினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு  ஐபிஎல் 2021 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.  கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் இந்த சூழலில் தன்னுடைய குடும்பத்தினருக்கு ஆதரவாக அவர்களுடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்து தெரிவித்துள்ள அஸ்வின், எல்லாம் சரியாக போகும் பட்சத்தில் மீண்டும் அணியில் இணைவேன் என்றும் கூறியுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அறிவிப்பு இந்நிலையில், அவருடைய இந்த முடிவுக்கு ஆதரவாக இருப்போம் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

எறுகுனுசூகூ ஐபிஎல்லின் 2021  சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன், ஆன்ட்ரூ டை  விலகியுள்ள நிலையில்,   அஸ்வினும் விலகுவதாக  அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, ஆர்.சி.பி வீரர்கள் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்டுசனும் விலகுவதாக அறிவித்து உள்ளனர்.  அடுத்தடுத்து ஐபிஎல் வீரர்கள் போட்டியில் இருந்து விலகி வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.