ஏப்ரல் 16-ம் தேதி திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விவேக். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அடுத்தநாள் (ஏப்ரல் 17) விவேக் காலமானார்.

திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் விவேக்கின் இறுதி அஞ்சலிக்கு அவரால் வரமுடியவில்லை.

இந்நிலையில் நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் இன்று விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து துக்கம் விசாரித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

[youtube-feed feed=1]