டில்லி

ந்திய ரயில்வேயில் சுமார் 95000 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  நேற்று வரை இங்கு 1.73 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டு 1.95 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை சுமார் 1.43 கோடி பேர் குணம் அடைந்து 28.07 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இதனால் தற்போது நாடெங்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு ஆக்சிஜன் எடுத்டுச் செல்லவும் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்யவும் இந்திய ரயில்வே மிகவும் பயனுள்ளதாக உள்ளது.   இந்நிலையில் நேற்று இந்திய ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அந்த தகவலில், “இந்திய ரயில்வேயில் சுமார் 12 லட்சம் பேர் பணி புரிகின்றனர்.  அதில் சுமார் 95000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இவர்களில் பலருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படாத நிலை உள்ளது.   ஆனால் ஒரு சிலர் கொரோனாவால் உயிரிழக்க நேரிட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம் முன்கள ஊழியர்களான ஓட்டுநர்கள், கார்டுகள், பராமரிப்பாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், டிக்கட் செக்கர்கள் ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு உண்டாக்கி வருகிறது.   இந்த கொரோனா காலத்திலும் தினசரி 17000 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.  மேலும் ஆக்சிஜன் எடுத்துச் செல்லவும் தனி ரயில்கள் ஒ0துக்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வேயில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டோருக்காக 72 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  இந்த மருத்துவமனைகளில் ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்து இருப்போர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவர்களுக்காக 5000 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது