கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் சுந்தர் சி. தற்போது வீடு திரும்பிவிட்டார். இதையடுத்து தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் குஷ்பு.

இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் கணவர் வீடு திரும்பிவிட்டார். என் குழந்தைகளுக்கு அவர்களின் அப்பா வீட்டிற்கு வந்துவிட்டார். என் மாமியாருக்கு அவரின் மகன் கோவிடில் இருந்து மீண்டு வந்துவிட்டார். ஆனால் நான் அனைவரின் குடும்பத்தாரும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். நெகட்டிவிட்டியை தூரம் வைத்துவிட்டு நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]