மும்பை: கொல்கத்தா அணிக்கெதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.

தற்போதைய நிலையில், புள்ளிப் பட்டியலில், கொல்கத்தா அணி 7வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 8வது இடத்திலும் உள்ளன. எனவே, இன்றையப் போட்டியில் வெற்றி பெறுவது இரண்டு அணிகளுக்குமே கட்டாயமாகியுள்ளது.

ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், ஒரு போட்டியில் நன்றாக ஆடிவிட்டு, அடுத்துவரும் சில போட்டிகளில் சொதப்புவதை, கடந்த சீசனிலிருந்தே வழக்கமாக வைத்துள்ளார். எனவே, இன்றாவது அவர் நன்றாக ஆடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை, வெற்றியை நெருங்கிவந்து, கடைசி நேரத்தில் கோட்டைவிடுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, இன்றையப் போட்டியில், அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், கொல்கத்தா அணி, 3 ஓவர்களுக்கு, விக்கெட் இழப்பின்றி, 14 ரன்கள் சேர்த்துள்ளது.

 

[youtube-feed feed=1]