டெல்லி: கோவிட் -19 தடுப்பூசிகளின் இறக்குமதி வரியை இந்தியா தள்ளுபடி செய்யும் என மத்தியஅரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதையடுத்து ரஷ்யாவின் ஸ்புட்னிக்வி தடுப்பூதி உபயோகத்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கிய நிலையில், அதை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் ஏற்கனவே ஃபைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனங்கள், இந்தியாவில் பயன்பாட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பபித்து உள்ளனர். அவற்றை அனுமதி கொடுப்பது குறித்து மத்தியஅரசு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தற்போதைய நிலையில், நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து கொரோனா தடுப்பூசிகளின் கொள்ளைமுதலையும் மத்தியஅரசு ஒழுங்குபடுத்தி வருகிறது. ஆனால், பல மாநிலங்கள் தாங்களாகவே இறக்குமதி செய்ய அனுமதி கோரி வருகின்றன.
இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் கொரோன தடுப்பூசிகளுக்கு இந்தியா தனது 10% சுங்க வரியை தள்ளுபடி செய்ய தீர்மானத்துள்ளதாக மத்திய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் திறந்த சந்தையில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கூறினார். விலை நிர்ணயம் செய்வதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு வழங்கப்படலாம், என்றும் தெரிவித்துள்ளார்.