டெல்லி: மாநிலங்களுக்கு ஒருநாளைக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது என மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தொற்று பரவல் உச்சமடைந்துள்ளதால்,நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், நாட்டில் தடுப்பூசி, ரெம்டெசிவர் மருந்து மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்து வருகிறது. இது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. மத்தியஅரசு மீது நீதிமன்றங்களும் கடுமையாக சாடியுள்ளன.
இ,நத் நிலையில், செய்தியார்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் என்பது உயிர் காக்கும் மருந்தாகும். வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. ‘
தற்போது நாடு முழுவதும், 7,500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 6,600 டன் மருத்துவ பணிகளுக்காக மாநிலங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட தவிர்க்க முடியாத சில தொழில்களைத் தவிர மற்றவற்றுக்கான ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டு, மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
மாநிலங்களுக்கான சப்ளையின் அளவை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் டன் ஆக்சிஜன் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் சப்ளை குறித்து 24 மணி நேரமும் இயங்கும் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. சப்ளை தாமதமானால் அந்த கண்காணிப்பு அறைக்கு மாநிலங்கள் தெரிவிக்கலாம் .
இவ்வாறு அவர் கூறினார்.