புதிய தமிழ்ப்படமொன்றில் ஹீரோயினாக நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளார். ‘சிந்தனை செய்’ பட இயக்குநர் யுவன் இயக்கும் இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியில் திகில் நகைச்சுவை ஜானரில் உருவாக உள்ளது.

இந்தப் படத்தின் மையக்கதாபாத்திரம் கிளியோபாட்ரா போல வலிமையாக இருப்பதால் சன்னி லியோனை நடிக்க வைக்க முடிவெடுத்ததாகவும், அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்ததாகவும் இயக்குநர் யுவன் தெரிவித்துள்ளார்.

சன்னி லியோன் உடன் நடிகர் சதீஷ், ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்துக்கு மாநகரம் படத்தின் இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார்.

[youtube-feed feed=1]