
கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் – திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்கள் இரங்கலை நேரிலும், சமூக வலைதளங்களிலும் தெரிவித்தனர். அதோடு விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் பலர் மரக்கன்றுகளுடன் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக் நினைவாக நடிகை ஆத்மிகா தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு, அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன்.
அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்.#GreenKalam pic.twitter.com/mnLBDtCCwe— Aathmika (@im_aathmika) April 20, 2021