
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தில் வெளியான வாத்தி கமிங் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி வருகிறது . இந்தப் பாடலை அனிருத் மற்றும் கானா பாலச்சந்தர் பாடியிருந்தனர்.
விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு தான் கெத்தாக நடந்து நடந்து வரும், வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை தீபிகா படுகோன்.
தீபிகா தனது படப்பிடிப்பிலிருந்து வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பின்னணியில், நடிகர் விஜய்யின் “வாத்தி கம்மிங்” என்ற ட்ரெண்ட் செட்டிங் பாடல் இசைக்கிறது. அதை அவர் “பி.டி.எஸ் ஆஃப் பி.டி.எஸ்” என்ற தலைப்பில் தலைப்பிட்டுள்ளார். இது பல்வேறு தருணங்களில் கெத்தாக நடக்கும் அழகான பெண்ணை காட்டுகிறது.
[youtube-feed feed=1]