மும்பை: மக்களின் நிஜ ஹீரோவான நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
நடிகர் சோனு சூட் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிவீட் செய்துள்ளார். அதனுடன் தற்போது மற்றவர்களுக்கு உதவுவதற்கு அதிக நேரம் கிடைக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா உச்சக்கட்டத்தை அடைந்தபோது, வாழ்வாதரம் இழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர். மேலும் பலர் வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டு, தாயம் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வந்தார். பல கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை செய்து, நிஜ ஹீரோவாக திகந்ந்தார். இப்போதும் அவர் ஏராளமானோருக்கு உதவி செய்து வருகிறார்.
இந்தம நிலையில் நடிகர் சோனு சூட் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், வணக்கம் நண்பர்களே, எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். எனவே என்னை நான் தனிமைப்படுத்தி கொண்டேன். கவலைப்பட ஒன்றிமில்லை, மாறாக முன்பை விட உங்கள் சிரமங்களை சரி செய்ய இப்போது எனக்கு அதிகம் நேரம் கிடைத்துள்ளது. நினைவில் கொள்ளுங்கள், எந்த பிரச்சனையும். நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.