சென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது.
மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 4.30 மணி அளவில் அவரது விருக்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, மேட்டுக்குப்பம் மயானம் சென்றடைந்தது., இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் விவேக்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்து.
தைத்தொடர்ந்து, விவேக்கின் உடலுக்கு காவல்துறையினர் சார்பில் 72 குண்டுகள் முழங்க நடிகர் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறை சார்பில் நடிகர் விவேக்கிற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.