சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் உயிரிழப்புக்கு காரணம், அவரது இதயம் பலவீனமாக இருந்தே என வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை விளக்கம் தெரிவித்துள்ளது.

மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அவருக்கு உடனடியாக ஆஞ்சிகிராம் செய்யப்பட்டு, இதயத்தில் இருந்த அடைப்பு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் அகற்றப்பட்டது என்றும், பின்னர், அவரது  உடல்நலம் மோசமானதை அடுத்து எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சிம்ஸ் மருத்துவமனை நேற்று கூறியது.

இன்று அதிகாலை 4.35 மணிக்கு விவேக் காலமானார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் விவேக்கிற்கு சிகிச்சை பலன் அளிக்காமல் போனதன் காரணம் குறித்து சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,  ‘

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது நடிகர் விவேக்குக்கு சுயநினைவோ, நாடித்துடிப்போ இல்லை என்று தெரிவித்துள்ளது.

உடல்நிலையை பரிசோதித்து உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது இருந்தாலும்,  விவேக்கின் உடல்நிலை மோசமாக இருந்தது, அவரது இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

விவேக்  மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து அவரின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது.

மருத்துவமனையிலிருந்து அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இல்லத்தின் முன்பு ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்படுவதற்கு முன்பு வியாழக்கிழமை கொரநாத் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்ட இன்று காலமானார்.   இது குறித்து மருத்துவ அறிக்கையில், “தடுப்பூசி போட்டுக் கொண்ட மறு நாளே அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும், மாரடைப்பு ஏற்பட்ட தற்கும் எந்த தொடர்பும் இல்லை” என கூறப்பட்டுள்ளது.