ராமேஸ்வரம்: நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சுற்றுலாத்தலமான ராமேஸ்வரம் வரும் வெளிமாநில வாகனங்களுக்கு இ.பாஸ் கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தமிழகத்திலும் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. இதை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இதுவரை 35 நபர்கள் கொரானாவால் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு மேலும் அதிகரித்து விடாதவாறு மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
அதனப்டி, ராமேஸ்வரத்திற்கு வெளிமாநில பக்தர்கள் அதிகப்படியாக வரும் காரணத்தால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு E-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. . மேலும் அரசு பேருந்துகளில் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பயணம் செய்யும் பயணிகளை பேருந்து நிலையம் அருகே பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே பேருந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட வருகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூடிய விரைவில் அவர்களும் கொரானா பாதிப்பில் இருந்து விடுபடுவார்கள் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டி ராமேஸ்வரம் நகராட்சி ஆய்வாளர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று கொரானா நோய்த்தொற்று இன்று ஏதும் இல்லாத காரணத்தால் பாதுகாப்பு வளையத்திற்குள் ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளனர்.