சென்னை

கொரோனா அதிகரிப்பால் வேலூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த 40 அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது   தமிழக அரசு இதைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.   இந்த கட்டுப்பாடுகளில் ஒரு பகுதியாகத் தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் அனைவரும் அமர்ந்து மட்டுமே செல்ல வேண்டும் எனவும் நின்றபடி பயணிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

மேலும் பேருந்தில் பயணம் செய்வோர் பயணம் முழுவதும் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  கொரோனா அச்சம் காரணமாக மாநிலம் முழுவதும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது.  பயணிகள் எண்ணிக்கை குறைவால் பல பேருந்து நிலையங்களில் பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் வேலூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளில் 40 அரசு பேருந்துகள் குரைக்கப்பட்டுள்ளன.   நேற்று தமிழ் வருடப் பிறப்பு மற்றும் நேற்று முன் தினம் தெலுங்கு வருடப்பிறப்பு என விடுமுறைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன.  அத்துடன் இயக்கப்பட்ட பேருந்துகளிலும் மக்கள் குறைவாகவே பயணம் செய்துள்ளனர்.