
சென்னை: ஐதராபாத் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில் ஆடிவரும் பெங்களூரு அணி, ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறது.
இதுவரை 15 ஓவர்கள் கடந்துள்ள நிலையில், வெறும் 103 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. விராத் கோலி 33 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். தேவ்தத் படிக்கல் 11 ரன்களில் வீழ்ந்தார். ஷபாஸ் அகமது 14 ரன்களில் வீழ்ந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால், பெங்களூரு அணி ரன் சேர்க்க திணறி வருகிறது. 15 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில், 4 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இதேநிலை நீடித்தால், பெங்களூரு அணி 150 ரன்களைக்கூட எட்டாது என்றே கணிக்கப்படுகிறது.
[youtube-feed feed=1]