டெல்லி: ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர பவுலரான அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரொனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2021 தொடர் கடந்த 9ந்தேதி சென்னையில் தொடங்கியது. 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கேபிட்டல்ஸ் மோதியது. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடட்டல் வெற்றி பெற்றது.
தொடர்ந்து நாளை (15ந்தேதி) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன்,டெல்லி கேபிட்டல்ஸ் அமோத உள்ளது. இந்த நேரத்தில், ல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரொனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் போட்டிகளில் ஆட முடியாத நிலை உருவாகி உள்ளனர். நட்சத்திர பவுலரான அன்ரிச் இல்லாதது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள பல வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க வீரர்கள், காகிசோ ரபடா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி மற்றும் குவின்ட டீ காக் ஆகியோருக்கும் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ரபடாவும் டெல்லி கேபிடல்ஸ் அணியை சேர்ந்தவர். இந்த நிலையில், அதே அணியைச் சேர்ந்த வேகப்பந்து பவுலரான அன்ரிச்சும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் அன்ரிச் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.