மும்பை: ராஜஸ்தான் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களைக் குவித்தது.
கேப்டன் ராகுல், 50 ஓவர்களில், 5 சிக்ஸர்கள் & 7 பவுண்டரிகளுடன் 91 ரன்களை விளாசினார். இவர் 9 ரன்களில் சதவாய்ப்பை இழந்தார்.
தீபக் ஹூடா 28 பந்துகளில், 6 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 64 ரன்களைக் குவித்தார். கெய்ல் 40 ரன்களை அடித்திருந்தார். இவர்கள் மூவரின் ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி இவ்வளவு பெரிய ரன்களை எட்டியது.
பஞ்சாப் அணி, 230 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவரில், அந்த அணியால் ரன்களையே அடிக்க முடியவில்லை. 6 பந்துகளில் 1 ரன் மட்டுமே கிடைத்தது அந்த அணிக்கு. இது ஆட்டத்தின் ஒட்டுமொத்த சூழலுக்கு முரணாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானின் சேட்டன் சகாரியாவுக்கு 3 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிசுக்கு 2 விக்கெட்டுகளும் கிடைத்தன.