சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

அதோடு மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் “நான் பார்த்தவரைக்கும் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கும், வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்கள்.. தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]