லக்னோ: 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதித்துள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கினை நடைமுறைப்படுத்த உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் தற்போது 12,748 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் 58,801 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந் நிலையில், தினமும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படும் மாவட்டங்கள் அல்லது 500க்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் மாவட்டங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கினை நடைமுறைப்படுத்த உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

ஏப்ரல் 30ம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், பயிற்சி வகுப்புகளையும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தேர்வுகள் தொடரும், அலுவலகத்தில் தேவையான பணிகளுக்கு மட்டும் பணியாளர்களை அழைக்கலாம் என்றும் மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
[youtube-feed feed=1]