சென்னை: திறந்து சில நாட்களில்,. பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட மெரினாவில் உங்ளள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்காக இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மறைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நினைவிடம் அமைக்கும் பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டது. சுமார் 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி செலவில் 15 மீட்டர் உயரம் மற்றும் 30.5 மீ நீளம், மற்றும் 43 மீ அகலம் கொண்ட ஒரு மிகப் பெரிய பீனிக்ஸ் பறவையின் உருவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவிடத்தை கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் (2021) தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் திறந்து வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உடனே பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டது. ஜெ.நினைவிடம், அருங்காட்சியகம் மற்றும் அறிவுத்திறன் பூங்காவின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பார்வையிடத் தடை செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்தது.
இந்த நிலையில், இன்றுமுதல் ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.