
நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி முதன் முதலாக இணைந்து நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் 8 ஆண்டுகள் கழித்து வெளியாகிறது.
இயக்குநர் சுந்தர் சி இயக்கிய’மதகஜராஜா’ சில பிரச்னைகள் காரணமாக தயாரிப்பாளர்கள், ஜெமினி பிலிம் சர்க்யூட் இதன் வெளியீட்டை பல முறை ஒத்திவைத்தது. பின்னர் வெளியிடுவதற்கான யோசனையும் கைவிடப்பட்டது.
இதில் நடித்துள்ள நடிகர்களில் கலாபவன் மணி, சிட்டி பாபு, மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயற்கை எய்தி விட்டனர்.
இந்நிலையில் ‘மதகஜராஜா’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டதால், ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
Patrikai.com official YouTube Channel