சென்னை: சென்னையில் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது: சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 23,500 போலீசார் ஈடுபடுத்தப்படுவர். தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின் வெளியாட்கள் யாரும் இருக்கக்கூடாது, அப்படி இருந்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். சென்னையில் 327 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை, 10 மையங்கள் மிகவும் பதற்றமானவை.
வாக்குப்பதிவு மையங்களில் செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது. மது பானங்கள் விற்பனை, கடத்தலை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய சென்னை போலீஸ் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.